விளையாட்டு

தென் ஆப்ரிக்கா புறப்பட்டுச் சென்றது இந்திய கிரிக்கெட் அணி

செய்திப்பிரிவு

வரும் 5- ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தென் ஆப்ரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.

தென் ஆப்ரிக்காவில், வரும் 5- ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. அதன் பின்னர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை 2 டெஸ்ட் தொடர்கள் நடைபெறவிருக்கின்றன.

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரய்னா, மோஹித் ஷர்மா, அமித் மிஸ்ரா, ஷிகார் தவான், விராட் கோஹ்லி, ரவீந்தர் ஜடேஜா, ஆர்.அஸ்வின், புவனேஸ்வர் குமார், முகமது ஷாமி, இஷாந்த் சர்மா, அம்பாத்தி ராயுடு, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, அஜின்கியா ரஹானே என 16 வீரர்கள் உள்ளனர். டெஸ்ட் போட்டிக்கான அணியில் 17 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT