இலங்கை இலங்கைகிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மர்வன் அட்டபட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த இங்கிலாந்தின் பால் பார்பிரேஸ் கடந்த வாரம் அப்பொறுப்பில் இருந்து விலகினார் என்பது நினைவுகூரத்தக்கது. இலங்கை முன்னாள் சுழற் பந்து வீச்சாளர், பீல்டிங் பயிற்சியாளராக இருந்த வருமான ருவான் கப்லகே துணை பயிற்சியாளராக நியமிக் கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி அடுத்ததாக அயர்லாந்து, இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி இலங்கைக்கு வந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகள் பயணித்த அட்டப்பட்டு 2007-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இலங்கை அணிக்காக 90 டெஸ்ட், 268 ஒருநாள் போட்டிகளிலும், இரு 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் .