விளையாட்டு

மாநில வாலிபால் போட்டி: திருவாரூர் அணி சாம்பியன்

செய்திப்பிரிவு

மாநில அளவிலான இளையோர் வாலிபால் போட்டியின் ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.

திருச்சி மாவட்ட வாலிபால் சங்கமும், சாரநாதன் பொறியியல் கல்லூரியும் இணைந்து மாநில அளவிலான இளையோர் வாலிபால் போட்டிகளை கடந்த 7-ம் தேதி முதல் நடத்தின. ஆண்கள் பிரிவில் 27, பெண்கள் பிரிவில் 22 அணிகளும் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் சாரநாதன் கல்லூரி வளாகத்தில் நேற்றிரவு நடைபெற்றன.

ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணி 25-20, 18-25, 25-14, 25-16 என்ற புள்ளிக் கணக்கில் கிருஷ்ணகிரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருநெல்வேலி அணி மூன்றாவது இடமும், தஞ்சை அணியும் நான்காம் இடமும் பிடித்தன.

அதேபோல, பெண்கள் பிரிவில் சேலம் அணி 25-8, 25-14, 25-19 என்ற புள்ளி கணக்கில் ஈரோடு அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. சென்னை அணி மூன்றா மிடமும், காஞ்சிபுரம் அணி நான்காம் இடமும் பிடித்தன.

SCROLL FOR NEXT