இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஜப்பானின் கஸூமசா சகாயை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் இந்தோனேசியன் ஓபன் சூப்பர் சீரிஸ் நடைபெற்று வந்தது. சனிக்கிழமை நடந்த ஆடவருக்கான ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்தும், தென் கொரியாவின் சோன் வான் ஹோவும் மோதினர்.இதில் 21-15, 14-21, 24-22 என்ற செட் கணக்கில் சோன் வான் ஹோவை வீழ்த்திய ஸ்ரீகாந்த் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இன்று இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் கஸூமசா சகாயுடன் பலப்பரீட்சை நடத்தினார் ஸ்ரீகாந்த். இதில் 21-11 21-19 என்ற நேர் செட்களில் கஸூமசா சகாயை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.