விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் : ஐதராபாத் அணிக்கு ஷிகார் தவான் கேப்டன்

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக, இளம் இந்திய வீரர் ஷிகார் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் டிவென்டி 20 தொடர், இந்தியாவில் இம்மாதம் 21 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் சங்ககாராவில் பங்கேற்க முடியவில்லை. இலங்கை வீரரான அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், ஐதராபாத் அணியின் கேப்டனாக இளம் வீரர் ஷிகார் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT