இந்தியாவில் டாஸ் பெரிதாகப் பேசப்படுகிறது, ஆனால் டாஸ் முடிவுகளை தீர்மானிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு அணிகள் டாஸில் வெல்வதை ஒரு மிகப்பெரிய காரணியாகக் காட்டுவதுண்டு, காரணம் முதல் ஒன்றரை அல்லது 2 நாட்களில் பேட்டிங் எளிதாக அமையும் என்பது சில அணிகளின் கோட்பாடு. இதனை மறுக்கும் டேரன் லீ மேன் கூறியதாவது:“கடந்த முறை இந்தியாவில் 4 முறையும் டாஸில் வென்றோம் ஆனால் தொடரை 4-0 என்று இழந்தோம் எனவே டாஸ் வெல்வது மட்டுமே வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதில்லை.
டாஸ் வென்றாலும் நன்றாக ஆடவேண்டும் என்பதே முக்கியம். என்னைப் பொறுத்தவரை டாஸ் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சாதகமாக இருந்து விட்டு போகட்டும், ஆஸ்திரேலியாவில் ஆடினாலும் இதுதான் டாஸைப் பொறுத்தவரை என் பார்வை.
எனவே இந்தியா நல்ல பிட்ச்களை உருவாக்கும் என்றே நம்புகிறேன், 5 நாட்கள் தாங்கும் நல்ல பிட்ச்கள் என்று கூறுகிறேன்” என்றார் டேரன் லீ மேன்.