விளையாட்டு

உலகக்கோப்பை: இந்திய-பாக். போட்டிக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் முற்றிலும் விற்பனை

செய்திப்பிரிவு

பிப்ரவரி 15, 2015 அன்று அடிலெய்டில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

50,000 பேர் அமர்ந்து பார்க்ககூடிய கொள்திறன் கொண்ட அடிலெய்ட் மைதானத்தில் பொதுப்பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

மேலும், இந்தியாவிலிருந்து 20,000 ரசிகர்கள் இந்தப் போட்டியை காண ஆஸ்திரேலியா வருகை தருவதாக அடிலெய்ட் மைதான நிர்வாகி தெரிவித்தார்.

பிப்ரவரி 15-ஆம் தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி முழு ரசிகர்களுடன் மைதானத்தில் களைகட்டவுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் தொடரின் 2-வது நாள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் 4 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT