விளையாட்டு

பள்ளிப் போட்டியில் 546 ரன்கள்: இந்திய கிரிக்கெட்டில் புதிய சாதனை

செய்திப்பிரிவு

மும்பையில் நடைபெற்று வரும் ஹாரீஸ் ஷீல்டுக்கான பள்ளிகள் இடையிலான கிரிக்கெட் போட்டியில் மும்பையைச் சேர்ந்த 15 வயது வீரர் பிரித்வி ஷா 546 ரன்கள் குவித்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

ரிஷ்வி ஸ்பிரிங்ஃபீல்ட் அணிக்காக விளையாடிய பிரித்வி, செயின்ட் பிரான்சிஸ் அணிக்கு எதிராக 546 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் 5 சிக்ஸர்களும், 85 பவுண்டரிகளும் அடங்கும்.

இதன்மூலம் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் 500 ரன்கள் எடுத்த முதல் பள்ளி கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

முன்னதாக பிரித்வியின் சீனியரும், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான வாசிம் ஜாபரின் உறவினருமான அம்ரான் 498 ரன்கள் குவித்ததே பள்ளி கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது.

1933-34-ல் மும்பையில் நடைபெற்ற போட்டியில் தாதாபாய் ஹவேலா என்பவரால் 515 ரன்கள் குவிக்கப்பட்டதே, இந்திய கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் தனியொரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. இப்போது அதுவும் முறியடிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT