விளையாட்டு

மீண்டும் டாப் 10-ல் தீபிகா

செய்திப்பிரிவு

சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் மீண்டும் முதல் 10 இடத்துக்குள் வந்துள்ளார். 12-வது இடத்தில் இருந்த அவர் இப்போது இரு இடங்கள் முன்னேறி 10-வது இடம் பிடித்துள்ளார்.

2012 டிசம்பர் மாதத்துக்குப் பின் அவர் இப்போது மீண்டும் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் மெககஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அவர் வெற்றி பெற்றார். சீன ஓபன் போட்டியில் காலிறுதி வரை முன்னேறினார். இதுவே தரவரிசையில் அவர் முதல் 10 இடத்துக்குள் வர முக்கியக் காரணமாக அமைந்தது.

சென்னையில் பிறந்த வீராங்கனையான தீபிகாவுக்கு சமீபத்தில்தான் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தரவரிசையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா, கடந்த ஆண்டின் இறுதியில் கிடைத்த வெற்றிகளே இப்போதைய முன்னேற்றத்துக்குக் காரணம். எனினும் இந்த ஆண்டு தொடக்கம் என்து ஸ்குவாஷ் வாழ்க்கையில் சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது.

எனவே தொடர்ந்து சிறப்பாக விளையாடி தரவரிசையில் எனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பேன். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் 5 இடத்தில் வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார். ஸ்குவாஷ் தரவரிசையில் முதல் 10 இடத்துக்குள் வந்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் தீபிகா பலிக்கல்.

SCROLL FOR NEXT