விசாகப்பட்டினத்தில் நேற்று, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்தியா தோல்வியடைந்தது குறித்து கேப்டன் மகேந்திரசிங் தோனி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், டாஸ் தோல்வி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மே.இந்தியத் தீவுகள் அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
வானிலையும் எதிர்பார்த்தது போல் இல்லை.மைதானம் மிகவும் ஈரத்தன்மை நிறைந்ததாக இருந்ததாலும், காற்றின் ஈரப்பதம் அதிகம் இருந்ததாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் பின்னடைவை சந்தித்ததனர்.
சிம்மன்ஸ் அடித்த பந்தை யுவராஜ் சிங் தவறு விட்டது குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் பந்தை தவற விட நேரும் அதை பெரிதாக்கி விமர்சிக்க வேண்டாம் என தெரிவித்தார்.