விளையாட்டு

ஆஸ்திரேலிய வீரர் ஜான்சன் விலகல்

செய்திப்பிரிவு

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டக் போலிங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது ஜான்சனின் வலது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது. போட்டியை முடித்து அவர் ஆஸ்திரேலியா திரும்பியபோது காயம் ஏற்பட்ட பகுதியில் நோய் தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் கிடைக்காததால் உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் தலைமை மருத்துவர் ஜஸ்டின் பலோனி கூறுகையில், “எங்களால் முடிந்தவரை ஜான் சனுக்கு சிகிச்சை அளித்துவிட்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிகிச்சைக்கு பலனளிக்கவில்லை. அவருடைய கால் பகுதியிலும் பாதத்திலும் இன்னும் வீக்கம் இருக்கிறது” என்றார்.

சமீப காலமாக தனது பந்துவீச்சால் எதிரணிகளை திக்குமுக்காட வைத்த ஜான்சன் இப்போது விலகியிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாகும்.

SCROLL FOR NEXT