விளையாட்டு

சையது முஸ்டாக் அலி டி 20 டிராபி: யுவராஜ், ஹர்பஜன், நெஹ்ரா பங்கேற்பு

பிடிஐ

ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்துள்ள சீனியர் வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் இன்று தொடங்கும் உள்ளூர் போட்டியான சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் பங்கேற்கின்றனர். இந்த தொடர் இவர்களுக்கு ஆஸி. தொடருக்கு முழு அளவில் தயாராக உதவியாக இருக்கும்.

சையது முஸ்டாக் அலி டி 20 தொடர் நாக்பூர், கொச்சி, வதோதரா, கட்டாக் ஆகிய 4 நகரங்களில் இன்று தொடங்குகிறது. டி 20 உலககோப்பை போட்டி வரும் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் முஸ்டாக் அலி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இந்த தொடரில் சிறப் பாக செயல்பட்டால் ஐபில் டி 20 அணி உரிமையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ப தால் உள்ளூர் வீரர்கள் எதிர்பார்ப் புடன் உள்ளனர். ஐபிஎல் 2வது கட்ட ஏலம் பிப்ரவரி மாதம் நடை பெறுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. டி 20 உலககோப் பையை கருத்தில் கொண்டே பிசிசிஐ இந்த தொடரை முழுவீச்சில் நடத்துகி றது.

2014ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ்சிங், தென் ஆப்பிரிக்க தொடரில் நம்பிக்கையுடன் செயல்பட்டு ஆஸி. தொடரில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன்சிங் ஆகியோர் முஸ்டாக் அலி டி 20 தொடரில் பஞ்சாப் அணியில் உள்ளனர். பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தானை சந்திக்கிறது. அதேவேளையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆஷிஷ் நெஹ்ரா டெல்லி அணிக்காக களமிறங்குகிறார். டெல்லி அணி இன்று ரயில்வேஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஒருநாள் போட்டிகளில் நீக்கப்பட்ட ரெய்னாவுக்கும் இந்த உள்ளூர் டி 20 தொடர் முக்கியத் துவம் வாய்ந்தது தான். அவர் தலைமையிலான உத்தரபிரதேச அணி, மகாராஷ்டிராவுடன் மோதுகிறது. தமிழக அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் ஹரியானா அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நாக்பூரில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT