கொல்கத்தாவில் நேற்று இலங்கைப் பந்து வீச்சை துவம்சம் செய்து 264 ரன்களை விளாசி உலக சாதனை படைத்த ரோஹித் சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"நான் ரோஹித் சர்மாவின் இந்த இன்னிங்ஸை பார்க்கவில்லை. ஆனால் 2-வது இரட்டை சதம் எடுப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. ரோஹித்தின் இந்த இன்னிங்ஸிற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக இது ஒரு சரியான பயிற்சியும், தயாரிப்பும் ஆகும்”
என்று ரத்தினச் சுருக்கமாக முடித்துக் கொண்டார் சச்சின்.