விளையாட்டு

பல்கலைக்கழக ஹேண்ட்பால் போட்டி

செய்திப்பிரிவு

இந்தியப் பல்கலைக்கழகக் குழுமத்தின் சார்பில் பல்கலைக்கழகங்கள் இடையேயான தென் மண்டல போட்டி காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நாளை தொடங்குகிறது. ஆடவர், மகளிர் பிரிவில் 8ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த தொடர் பிப்.11 முதல்15 வரை வாரணாசியில் நடைபெறும் அனைத்திந்திய பல்கலைக்கழகங்கள் இடையேயான இறுதிப்போட்டியில் பங்கு பெறுவதற்கான தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் பிரிவில் 4 அணிகளைத் தேர்வு செய்வதற்காக நடைபெறுகிறது.

தென் மாநிலங்களைச் சேர்ந்த கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பங்கு பெறுகின்றன.

SCROLL FOR NEXT