விளையாட்டு

உலகக் கோப்பை கபடி: வெற்றியுடன் துவங்கியது இந்தியா

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று கணக்கைத் துவக்கியது.

ஆடவர் மற்றும் மகளிருக்கான உலகக் கோப்பை கபடி போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஆடவர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா 59-31 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவையும், ஸ்பெயின் 40-32 என்ற புள்ளிகள் கணக்கில் கென்யாவையும் தோற்கடித்தன.

மகளிர் பிரிவு போட்டியில் இந்தியா 44-12 என்ற புள்ளிகள் கணக்கில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது.

SCROLL FOR NEXT