விளையாட்டு

ரஹானேவுக்கு பதில் யுவராஜ் ஆட வேண்டும்; தோனி அவசியம்: மைக்கேல் கிளார்க் கருத்து

இரா.முத்துக்குமார்

வரும் ஞாயிறன்று பாகிஸ்தான் அணியை இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் எதிர்கொள்ளும் நிலையில் இந்திய அணி எப்படி அமைய வேண்டும் என்று மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஜ்தக் சலாம் கிரிக்கெட் நிகழ்ச்சியில் கிளார்க் கூறும்போது, ரஹானேவுக்குப் பதில் யுவராஜ் சிங் அணியில் இடம் பெற வேண்டும். தோனி, யுவராஜ் ஆகியோரது அனுபவம் இந்திய அணிக்குக் கைகொடுக்கும். இளம் திறமையுடன் அனுபவ வீரர்களும் சேர்ந்த ஒரு அணியை இந்திய அணி களமிறக்கினால் இந்திய அணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்.

தோனி அணியில் இருந்தேயாக வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மெனாகவும் நன்றாகவே செயல்பட்டுள்ளார். அவர் இன்னமும் கூட இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியும். கோலிக்கு தோனி பெரிய அளவில் உதவிகரமாக இருப்பார், என்று கூறினார்.

மைக்கேல் கிளார்க் கருத்தை இலங்கை நட்சத்திரம் குமார் சங்கக்காராவும் ஆதரித்தார்.

SCROLL FOR NEXT