நெதர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அங்கு பிரதமர் மோடியைச் சந்தித்ததை புகைப்படத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“கோல்டன் விஷன் உள்ள மனிதரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி போர்ச்சுக்கல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இந்த ஆண்டு இந்திய-டச்சு உறவுகளில் 70-ம் ஆண்டை தொட்டுள்ளது.
ரெய்னா நெதர்லாந்து மட்டும் செல்லவில்லை, சில நாட்களுக்கு முன் பாரீஸில் ஒரு உணவு விடுதியில் இருப்பதாக புகைப்படத்துடன் அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக ஆடினார் ரெய்னா, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஓரங்கட்டப்பட்டார்.