உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் ஜித்து ராய் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
இறுதி சுற்றில் அவர் மொத்தம் 216.7 புள்ளிகள் பெற்றார். ஜப்பானின் டோமோயுகி மட்சுமா 240.1 புள்ளிகள் குவித்து உலக சாதனை யுடன் தங்கப் பதக்கம் வென்றார். வியட்நாமை சேர்ந்த சூவான் வின் ஹோங் 236.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.