விளையாட்டு

வெற்றிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்: அனில் கும்ளே நம்பிக்கை

செய்திப்பிரிவு

வெற்றிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளே கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளே, ஐதராபாத்தில் நேற்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர், இந்திய வீரர் களுக்கு மிகுந்த தன்னம்பிக் கையை அளித்தது. அந்த நம்பிக் கையுடன் வெற்றிப் பாதையில் தொடர்ந்து முன்னேற திட்டமிட் டுள்ளோம். வங்கதேச கிரிக்கெட் அணி, தரவரிசையில் குறைந்த இடத்தில் இருந்தாலும், அந்த அணியைப் பற்றி குறைவாக எடைபோட மாட்டோம். சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டது. அதை கருத்தில் கொண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கவனமாக ஆடுவோம்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், லோகேஷ் ராகுலும் இருப்பார்கள். அவர்கள் ஆட முடியாமல் போனால் மட்டுமே அபினவ் முகுந்துக்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கருண் நாயர், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். சென்னை போட் டியில் அவர் 303 ரன்களை எடுத்ததால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவரையே மீண்டும் ஆட வைப்பதா? அல்லது காயத்தில் இருந்து குணமடைந்த ரஹானேவுக்கு வாய்ப்பளிப்பதா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

இளம் வீரர்களில் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு சிறப் பாக உள்ளது. அவர் ரன்களை எடுப்பதுடன் தொடர்ந்து 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசவும் செய்கிறார். எனவே அவரை டெஸ்ட் போட்டிகளில் ஆட வைப்பது குறித்து பரிசீலனை செய்வோம். அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு தொடர்ந்து சிறப்பாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மிக நன்றாக பந்து வீசினார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தோள்கொடுக்கும் வகையில் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.

இவ்வாறு அனில் கும்ளே கூறினார்.

SCROLL FOR NEXT