தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முதல்முறை யாக வென்று சாதனை படைத்துள்ளது மிஸ்பா-உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரு இருபது ஓவர் கிரிக்கெட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றன.
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது.
மழை காரணமாக இப்போட்டி தலா 45 ஓவர்களாகக் குறைக்கப் பட்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் 262 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது.
இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் வென்று பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் அகமது ஷேசாத் 102 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் 9 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். இது அவரது சிறப்பான பந்து வீச்சாகவும் அமைந்தது.
இந்த வெற்றி மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முதல்முறை யாக வென்று பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.
இறுதி வரை பரபரப்பாக இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜுனைட் கான் வீசிய அந்த ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர்களால் 7 ரன்கள் மட்டுமே எடுத்த முடிந்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, டி கேப்டன் டிவில்லியர்ஸ் ஆகியோர் களத்தில் இருந்தபோது ஆட்டம் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக இருந்தது. கடைசி கட்டத்தில் ஆம்லா 98 ரன்களிலும், டிவில்லியர்ஸ் 74 ரன்களிலும் ஆட்டமிழந்ததை அடுத்து வெற்றி பாகிஸ்தான் வசமானது.
சதமடித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் அகமது ஷேசாத் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இரு அணிக ளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் செஞ்சூரியனில் சனிக்கிழமை நடை பெறவுள்ளது.