கிறிஸ் கெய்லை எப்படியாவது அணிக்குள் கொண்டு வாருங்கள் என்று ஆர்சிபிக்கு கங்குலி ஆலோசனை வழங்கினார், அது போலவே செய்தார் கோலி, கெய்ல் வந்தார் விளாசினார், ஆர்சிபி வென்றது.
38 பந்துகளில் 77 ரன்கள் என்ற அவரது தொடக்கம் ஆர்சிபி அணியை அசைக்க முடியாத ஒரு நிலைக்கு இட்டுச்சென்று வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இதற்கு வழிவகை செய்யுமாறு காயமடைந்த டிவில்லியர்சுக்குப் பதிலாக மிகச்சரியாக கிறிஸ் கெய்லை உள்ளே நுழைத்தனர்.
தனது சாதனை, இந்த இன்னிங்ஸ் பற்றி கிறிஸ் கெய்ல் கூறும்போது, “சாதனை குறித்து சாமுவேல் பத்ரீ எனக்கு நினைவூட்டினார். எனவே அது என் மனதில் நிலைபெற்று விட்டது. சாதனையைக் கடந்தவுடன் அடித்து ஆடும் நேரம் என்று நினைத்தேன், அது கைகொடுத்தது. இந்த ரன்களை எடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த இன்னிங்ஸ் எனக்கு மிகவும் தேவைப்படும் ஒன்றாகப் போனது 10,000 ரன்கள் மைல்கல்லை முதல் வீரராக எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது, ரசிகர்கள் இன்னமும் கிறிஸ் கெய்லுக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றனர், இந்த உலகின் பாஸ் இன்னும் இங்குதன இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிரடி மூலம் விருந்து படைப்பேன்” என்றார் கெய்ல்