புதுச்சேரி ஆரோவில்லில் தென்னிந்திய குதிரையேற்ற பந்தயப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்ன.
ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளித் திடலில் 14-வது ஆண்டாக இப்போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டியில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. கோல்கத்தா, மும்பை, பெங்களூர் தமிழகத்தில் இருந்தும் 300-க்கு மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச குதிரையேற்ற கழக நடுவர் ஆஸ்திரேலியாவின் மரியா வென்சன், மூத்த வீரர் ஜெனரல் ஆர்.கே.சுவாமி போட்டிகளை நடத்துகின்றனர். தொடக்க நாளான வெள்ளிக்கிழமை இந்திய லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பான உடையலங்காரத்துடன் குதிரையில் பயணிப்பதற்கான போட்டி நடந்தது.
இதில் பேசிக் 1 முதல் 4 வரையும், அட்வான்ஸ்ட் -1, அட்வான்ஸ்ட் ஓபன், மீடியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர், சிறுமியர் பிரிவிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். வரும் 16-ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கின்றன. மேலும் குதிரைகள் சிறப்பு குறித்த ஓவியப் போட்டி, புகைப்பட போட்டியும் பேஷன் ஷோவும் நடத்தப்படுகிறது.