சர்வதேச தரத்திலான பாட்மிண்டன் பயிற்சி அகாடமி விருதுநகரில் தொடங்கப்பட்டுள்ளது. பால் சார்ந்த பொருள் தயாரிப்பில் முன்ன ணியில் உள்ள ஹட்சன் அக்ரோ புராடெக்ட் (ஹெச்ஏபி) நிறுவனம் ரூ.20 கோடி முதலீட்டில் இந்த அகாடமியை உருவாக்கியுள்ளது
கிராமப் பகுதிகளில் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளிடம் உள்ள திறமைகளை மெருகேற்றி அவர்களைச் சர்வதேச அளவில் ஜொலிக்க வைப்பதே இந்த அகாடமியின் முக்கிய நோக்கம் என்று ஹெச்ஏபி தலைவர் ஆர்ஜி சந்திரமோகன், திறப்பு விழாவின் போது தெரிவித்தார்.
நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையின் (சிஎஸ்ஆர்) ஒரு செயல்பாடாக இந்த அகாடமி திறக்கப்பட்டுள்ள தாக அவர் மேலும் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங் கலில் 6 ஏக்கர் பரப்பளவில் 8 ஆடுகளங்களைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உடற்பயிற்சி மையம், நீச்சல் குளம், ஓட்டப் பந்தய மைதானம் உள்ளிட்டவை உள்ளன. இம்மை யத்தின் ஆடுகளங்களைத் தேவைப்பட்டால் 16-ஆக விரிவுபடுத்தும் வசதியும் உள்ளது.
பாட்மிண்டன் போட்டியில் தேசிய சாம்பியன் பட்டத்தை 4 முறை வென்றுள்ள அஜித் ஹரிதாஸ் தலைமையிலான பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். விடுதி வசதியோடு இது உருவாக்கப்பட்டுள்ளது. படிக்கும் மாணவர்களின் வசதிக்காக ஆர்ஜே மந்த்ரா பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மாணவர்கள் படிப்போடு விளை யாட்டையும் எவ்வித இடை யூறின்றித் தொடர முடியும்.