இந்த வருடம் நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளேன். இந்த தொடர் உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் பங்குவகிக்கும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சர் வதேச கிரிக்கெட் கவுன்சில் இணை யதளத்தில் கூறியிருப்பதாவது:
மகளிர் உலகக் கோப்பை யில் தாய்லாந்து அணி சேர்க்கப் பட்டுள்ளது சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அந்த அணி அடுத்த வாரம் இலங்கையில் நடைபெற உள்ள தகுதி சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்கிறது.
வரும் ஜூன், ஜூலை மாதங் களில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகம் முழுவதும் முன்மாதிரியாக திகழும் மகளிர் வீராங்கனைகள் கலந்து கொள்வதால் தரமான கிரிக்கெட்டை நாம் பார்க்க முடியும்.
மகளிர் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. வீராங் கனைகளின் சிறந்த ஆட்டத்தால் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவர்களின் மூலம் இளம் வீராங்கனைகள் விளையாட்டில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் மூலம் பெரிய அளவிலான எண்ணிக்கையில் வீராங் கனைகள் விளையாட்டை பின் தொடர்வார்கள். அதேவேளையில் இந்த விளையாட்டானது உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தனது தடத்தை விரிக்க முயலும். கிரிக்கெட் விளையாடாத நாடுகளில் கூட கால்பதிக்கும்.
பாலின வேறுபாடு என்பது உலகில் எரிச்சலை உருவாக்கும் பல்வேறு அம்சங்களில் உள்ளது. ஆனால் விளையாட்டில் இது வேறுவிதமாக உள்ளது. வரலாற் றில் பெண்கள் தங்கள் பெரு மையை நிலைநாட்ட கிரிக்கெட்டும் உதவுகிறது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி, மட்டை யாளர் மிதாலி ராஜ் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக செயல் படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோல் பாகிஸ் தானின் மிஸ்மா மரூப், சனா மிர், தென் ஆப்பிரிக்காவின் மிக்னான் டூ பிரீஸ், டேன் வான் நைகெர்க், மரிஸானே ஹப் ஆகியோரும் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் பங்குபெற உள்ள அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல் நீங்களும் முழுமனதுடன் மகளிர் கிரிக்கெட் போட்டிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.