விளையாட்டு

தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியான் மெக்லாரன், வேயன் பர்னெல் ஆகியோருக்கு 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆல்ரவுண்டர் காலிஸின் ஓய்வைத் தொடர்ந்து அந்த இடத்தைப் பிடிப்பதற்கு இந்த இரு வீரர்களிடையே போட்டி நிலவும் என தெரிகிறது.

அணி விவரம்: கிரீம் ஸ்மித் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, ஏ.பி.டிவில்லியர்ஸ், ஜே.பி.டுமினி, ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், டியான் எல்கர், ரோரி கிளெய்ன்வெல்ட், ரியான் மெக்லாரன், மோர்ன் மோர்கல், வேயன் பர்னெல், ஆல்விரோ பீட்டர்சன், ராபின் பீட்டர்சன், வெர்னான் பிலாண்டர், டேல் ஸ்டெயின், தாமி சோலேகைல். -பிடிஐ

SCROLL FOR NEXT