ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து எரிச்சலில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெலை மேலும் வெறுப்பேற்றும் விதமாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப கடும் கோபமடைந்து வெளியேறினார் மேக்ஸ்வெல்.
நேற்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் 188 ரன்களை விரட்டும் போது 137 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியதையடுத்து மேக்ஸ்வெல் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தார்.
அப்போது ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக மேக்ஸ்வெலின் பலவீனம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப கடுப்பான மேக்ஸ்வெல், “இது அதிர்ச்சியளிக்கும் கேள்வி.
கடந்த 3 போட்டிகளில் நான் லெக் ஸ்பின்னர்களை சிக்சர்கள் விளாசியதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?” என்று ஆத்திரத்துடன் கூறி ஒரு வசை வார்த்தையுடன் சந்திப்பிலிருந்து வெளியேறினார்.
4 போட்டிகளில் மேக்ஸ்வெல் 44, 43, 25 மற்றும் 0 என்ற ஸ்கோர்களை மேக்ஸ்வெல் எடுத்துள்ளார்.