சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பி.ஜே.ரெக்ஸ். 18 வயது கால்பந்து வீரரான இவர் பள்ளியில் பயிலும்போது பல்வேறு கிளப் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் இடம் பெற்ற எஸ்பிஓஏ பள்ளி அணி கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்தில், பெங்களூருவில் நடைபெற்ற தேசிய இளைஞர் கால்பந்து போட்டியில் பட்டம் வென்றது. இந்த தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 40 பள்ளி அணிகள் கலந்து கொண்டன.
இந்த தொடரை கர்நாடகா மாநில கால்பந்து சங்கத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கோவா கால்பந்து கிளப் நடத்தியது. இதே ஆண்டில் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் 26 நாடுகள் பங்கேற்ற கால்பந்து போட்டியிலும் ரெக்ஸ் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில், முன் னாள் சர்வதேச கால்பந்து வீரரும் இந்திய கால்பந்து சங்கத்தின் ஆலோசகருமான எரிக் பென்னி கால்பந்து வீரர்கள் தேர்வை நடத்தினர். இதில் தேர் வான ரெக்ஸ், ஜெர்மனியில் உள்ள டிஎப்ஐ கால்பந்து அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு உரு வானது.
இதன் ஒருகட்டமாக ஜெர் மனியில் கடந்த மே மாதம் நடைபெற்ற டிஎப்ஐ கால்பந்து அணியின் தேர்வு முகாமில் ரெக்ஸ் பங்கேற்றார். இந்த முகாமில் சிறப் பாக செயல்பட்ட ரெக்ஸ் டிஎப்ஐ கால்பந்து கிளப்பில் 3 ஆண்டுகள் காலத்துக்கு விளையாட தேர்வாகி உள்ளார்.