விளையாட்டு

சச்சினின் கடைசி போட்டியில் சூதாட்டம்

செய்திப்பிரிவு

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியை மையமாகவைத்து மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மும்பையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

பொதுவாக ஒரு அணி போட்டியில் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடையுமா என்பதை மையமாகக் கொண்டுதான் சூதாட்டம் நடைபெறும். ஆனால் இந்த டெஸ்ட்டில் சச்சின் சதமடிப்பாரா, மாட்டாரா, அவர் எத்தனை ரன்கள் எடுப்பார், எத்தனை பவுண்டரிகளை விளாசுவார் என்று சச்சினை மையமாகக் கொண்டு கோடிக்கணக்கிலான பணம் பந்தயமாகக் கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சச்சின் கடைசி மற்றும் 200-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 14-ம் தேதி தொடங்க இருக்கிறது.

இப்போட்டி இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் சிறிய அளவில் இருந்து கோடிக் கணக்கான பணத்தைக் கொட்டி சூதாட்டமும் நடைபெற்று வருவதாக போலீஸாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற் கொண்டுள்ளனர்-பி.டி.ஐ.

SCROLL FOR NEXT