விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளரானார் எல்.பாலாஜி

பிடிஐ

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும் தமிழ்நாடு வீரருமான லஷ்மிபதி பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எல்.பாலாஜி தமிழ்நாடு ரஞ்சி அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

கொல்கத்தா அணியில் 2011 முதல் 2013 வரை ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். 2012-ல் அணி கோப்பையை வென்ற போது எல்.பாலாஜி பெரிய அளவில் பங்களிப்பு செய்தார்.

இது குறித்து எல்.பாலாஜி கூறும்போது, “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடும்போது மகிழ்ச்சியுடன் ஆடினேன், தற்போது மீண்டும் அந்த அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது, பெருமையளிக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT