விளையாட்டு

பாக்.நியூசி. டெஸ்ட்: லதாம் மீண்டும் சதம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் –நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாளன்று நியூசிலாந்து அணி, 3 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்திருந்தது.

அபுதாபியில் பாகிஸ்தான் –நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. நேற்று துபாயில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

முதல் டெஸ்ட்டில் மோசமாகத் தோற்றதால் இந்தமுறை கவனமாக ஆடினார்கள் நியூசிலாந்து வீரர்கள். முதல் டெஸ்ட்டில் சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் லதாம், இந்த டெஸ்ட்டிலும் சதம் அடித்தார். மெக்குல்லம் 43 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், நியூசிலாந்து 243 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. லதாம் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

SCROLL FOR NEXT