விளையாட்டு

10 ஐபில் தொடர்களில் 7-வது இறுதிப்போட்டியில் களம் காணும் தோனியின் சாதனை

இரா.முத்துக்குமார்

10-வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை (ஞாயிறு) நடைபெறும் நிலையில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக களமிறங்கும் புனே அணியின் நட்சத்திர வீரர் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 7-வது இறுதிப் போட்டியில் களம் காண்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் தோனி செய்துள்ள அடுத்த சாதனையாகும் இது. தோனி 2010, 2011 தொடர்களில் கோப்பையை வென்றார். இதற்கு முந்தைய 6 இறுதிப் போட்டிகளில் தோனி 168 ரன்களை 150 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையாக களம் காண்கிறது: 2010, 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோதியது. இதில் 2013 மற்றும் 2015-ல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.

இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 முறை எதிர்கொண்டு 3 முறையும் வென்றுள்ளது புனே, அணி, அதாவது 2 லீக் போட்டிகள் பிறகு பிளே ஆஃப் சுற்று வெற்றிகளாகும்.

முன்பும் கூட 2010 தொடரிலும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றுள்ளது.

17 வயது நிரம்பிய வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் இறுதியில் ஆடும் இளம் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். இதற்கு முன்னார் ராஜஸ்தான் ராயல்ஸ் 2008-ல் கோப்பையை வென்ற போது இறுதி ஆடிய ரவீந்திர ஜடேஜாவின் வயது 19 என்பது குறிப்பிடத்தக்கது. மணீஷ் பாண்டே பெங்களூருவுக்கு ஆடிய 2009-ம் ஆண்டு இறுதியில் நுழைந்த போது இறுதி ஆடிய இளம் வீரராகத் திகழ்ந்தார்.

இந்த தொடரில் கடைசி 5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் ஓவருக்கு 10.71 ஆகும். கடைசி 5 ஓவர்களில் 45 சிக்சர்களையும் 43 நான்கு ரன்களையும் அடித்துள்ளனர்.

கெய்ரன் பொலார்டின் இறுதிப்போட்டி ஸ்ட்ரைக் ரேட் 205 ஆகும். 2010-ல் 10 பந்துகளில் 27 ரன்களையும் 2013-ல் 32 பந்துகளில் 60 ரன்களையும் 2015-ல் 18 பந்துகளில் 36 ரன்களையும் விளாசியுள்ளார். 2013-ல் பொலார்ட் ஆட்ட நாயகன். ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் பொலார்ட் அதிக ரன்களையும் சிக்சர்களையும் அதிக ரன் ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT