மும்பை
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில், காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் ரெய்னாவுக்குப் பதிலாக, சமீப காலமாக அதிரடியாக பேட் செய்துவரும் ஷிகார் தவாண் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
அணி விவரம்:
தோனி (கேப்டன்)
ஷிகார் தவாண்
முரளி விஜய்
புஜாரா
சச்சின் டெண்டுல்கர்
விராட் கோலி
அஸ்வின்
புவனேஷ்வர் குமார்
ஓஜா
அமித் மிஸ்ரா
ரஹானே
உமேஷ் யாதவ்
முகமது சமி
ரோஹித் ஷர்மா
இஷாந்த் ஷர்மா.