விளையாட்டு

ஜிம்பாப்வே பரிதாப ஒயிட்வாஷ்: தொடரை வென்றது இந்தியா

செய்திப்பிரிவு

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஏற்கெனவே இந்தியா தொடரை வென்ற நிலையில், 3-வது போட்டியின் வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு ஒயிட்வாஷ் தோல்வி ஆனது.

இந்தப் போட்டியில் 124 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி ஆரம்பம் முதலே எந்தவித அழுத்தமும், அச்சுறுத்தலும் இன்றி ரன் குவித்தது. துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 58 பந்துகளில் தனது முதல் அரை சதத்தை எட்டினார்.

மற்றொரு துவக்க வீரர் ஃபாசலும், 58 பந்துகளில் அரை சதம் எட்டினார். இது அவரது முதல் ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் ராகுல் 63 ரன்களும், ஃபாசல் 55 ரன்களும் சேர்த்தனர்.

இந்திய அணி 21.5 ஓவர்களிலேயே 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கடந்த 2 போட்டிகளைப் போலவே இந்த போட்டியிலும், ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் பிரகாசிக்க தவறினர்.

ஜிம்பாப்வே அணியின் சிபந்தா அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார். 42.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தை ஜிம்பாப்வே அணி 123 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய தரப்பில் பும்ரா 10 ஓவர்கள் வீசி 22 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT