விளையாட்டு

ஆஸ்திரேலிய தொடருக்குள் முழுமையாக குணமடைவேன்: ரோஹித் சர்மா நம்பிக்கை

ஏஎன்ஐ

ஆஸ்திரேலிய தொடருக்குள் முழுமையாக குணமடைந்து விடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து தொடரின்போது ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து தொடையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரோஹித் சர்மா, கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் வலைதளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆட விரும்புகிறேன். அதற்குள் நான் முழுவதுமாக குணமடைந்து விடுவேன் என்று நம்புகிறேன். தற்போது நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறேன்.

இங்குள்ளவர்கள் எனக்கு மிகவும் உதவியாக உள்ளனர். மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அளவுக்கு நான் எப்போது தயாராவேன் என்று கூற முடியாது. ஆனால் ஆஸ்திரேலிய தொடருக்குள் என் உடல் தகுதியை நிரூபிக்க முயற்சிப்பேன். விளையாட்டின்போது ஒருவர் காயமடைவது சகஜமான விஷயம்தான். அதைத் தவிர்க்க முடியாது.

இவ்வாறு ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT