விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை நசுக்கியது இலங்கை

செய்திப்பிரிவு

டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றில் நெதர்லாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. ஆட்டநாயகனாக இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்

40 ரன்கள் என்கிற எளிய இலக்கை விரட்டிய இலங்கை, 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. துவக்க வீரர் பெரேரா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய தில்ஷான் 12 ரன்களும், ஜெயவர்த்தனே 11 ரன்களும் எடுத்தனர்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை அணி நெதர்லந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. குலசேகரா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்திலேயே மைபர்க் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகள் வரிசையாக சரிய, 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ரன்களை மட்டுமே நெதர்லந்து அணி எடுத்தது.

டி20 போட்டிகளில் ஒரு அணி எடுக்கும் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதோடு தனது இன்னிங்ஸில் மொத்தம் 10.3 ஓவர்கள் (63 பந்துகள்) மட்டுமே நெதர்லந்து அணி சந்தித்து. டி20 போட்டிகளில் ஒரு அணி எதிர்கொண்ட குறைந்தபட்ச ஓவர்கள் இதுவாகும்.

இலங்கை அணியின் மேத்யூஸ் மற்றும் மெண்டிஸ் தலா மூன்று விக்கெட்டுகளும், மலிங்கா 2 விக்கெட்டுகளும், குலசேகரா ஒரு விகெட்டும் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT