ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற சாக்.ஷி மாலிக்குக்கு ரூ.25 லட்சமும் பரிசளிக்கப் போவதாக துபாயில் வசிக்கும் இந்திய தொழில் அதிபரான முக்காட்டு செபாஸ்டியன் அறிவித்துள்ளார்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் பிறந்த செபாஸ்டியன் இதுகுறித்து நிருபர்களிடம் கூறும்போது, “நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை. இருப்பினும் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மானம்காத்த பி.வி.சிந்துவையும், சாக்.ஷி மாலிக்கையும் கவுரவிக்க விரும்புகிறேன்.
அதனால் சிந்துவுக்கு ரூ.50 லட்சமும், சாக்ஷி மாலிக்குக்கு ரூ.25 லட்சமும் பரிசளிக்க உள்ளேன். கேரளாவின் கொச்சி நகரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இந்த பரிசை வழங்கவுள்ளேன்” என்றார்.