ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதியில் (முதல் லெக்) ரியல் மாட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் போரஷியா டார்ட்மன்ட் அணியைத் தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் மாட்ரிட் அணியின் 3-வது கோலை ரொனால்டோ அடித்தார். இதன்மூலம் இந்த சீசனில் 14-வது கோலை பதிவு செய்த அவர், ஒரு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக கோல்களை அடித்தவரான பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்தார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் கடந்த சீசனின் அரையிறுதியில் டார்ட்மன்ட் அணியிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்துள்ளது மாட்ரிட்.