ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஏப்ரல் 28 முதல் மே 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு ஷரத் கமல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஆடவர் அணியில் ஷரத் கமல் தவிர, சௌம்யஜித் கோஷ், ஹர்மீத் தேசாய், அந்தோணி அமல்ராஜ், சனில் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி வீராங்கனை மணிக்கா பத்ரா, மும்பை வீராங்கனை பூஜா சஹஸ்ரபுத்தே ஆகியோர் முதல்முறையாக இந்திய மகளிர் அணியில் இடம்பிடித்துள்ளனர். கே.ஷாமினி, அங்கிதா தாஸ், மதுரிகா பட்கர் ஆகியோர் இந்திய அணியில் உள்ள மற்ற வீராங்கனைகள் ஆவர்.
வெளிநாட்டு பயிற்சியாளர் பீட்டர் இங்கேல், தேசிய பயிற்சியாளர்கள் பவானி முகர்ஜி, கமலேஷ் மேத்தா, இந்து புரி, அரசின் பார்வையாளர் மஞ்ஜித் துவா, இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளன தலைவர் சதுர்வேதி, அமைப்பாளர் தன்ராஜ் சௌத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு இந்திய அணியைத் தேர்வு செய்துள்ளது.