விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு கிரெய்க் மெக்டர்மட் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட் விண்ணப்பித்துள்ளார்.

ஏற்கெனவே விரேந்திர சேவாக், அனில் கும்ப்ளே, லால்சந்த் ராஜ்புத், டொட்டா கணேஷ், டாம் மூடி உள்ளிட்டோர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணபித்துள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் மெக்டர்மட் விண்ணப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

தலைமைப் பயிற்சியாளராக வேண்டும் என்று கொஞ்ச நாட்களாகவே ஆசை இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஓராண்டு பயிற்சியாளர் பொறுப்புகளிலிருந்து விலகியிருந்தேன். இப்போது மீண்டும் கிரிக்கெட்டுக்காக பணியாற்ற விரும்புகிறேன். இந்தியாவில் நான் நிறைய மகிழ்ச்சியான தருணங்களில் இருந்துள்ளேன். எனவே இந்திய கிரிக்கெட்டுக்குச் சேவையாற்றுவதை விரும்புகிறேன்.

வீரர்களுடனும் உதவிப் பயிற்சியாளர்கள், நிர்வாகம் உள்ளிட்டோருடன் சுமுகமான உறவுகளுடன் பணியாற்ற முடியும் என்று ஆழமாக நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் மெக்டர்மட்.

SCROLL FOR NEXT