பெங்களூரில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது.
இதற்கு முன்பாக 2007 மற்றும் 2012-லும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய இந்திய அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பிரகாஷா ஜெயராமையா ஆட்டமிழக்காமல் 99 ரன்களையும் அஜய் குமார் ரெட்டி 43 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு பங்களிப்பு செய்தனர்.