சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் புஜாரா 7-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். பந்து வீச்சாளர்கள் வரிசையில் அஸ்வின் 8-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் ஓஜா, 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜாகீர் கான் ஓரிடம் பின்தங்கி 17-வது இடத்துக்கு சென்றுவிட்டார்.
இந்திய கேப்டன் தோனி 20-வது இடத்தில் உள்ளார். புஜாராவுக்கு அடுத்தபடியாக முதல் 20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் உள்ளவர் தோனி மட்டுமே. பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். சகநாட்டு வீரரான ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தைப் பிடித்தார்.