குஜராத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங் ஸில் 228 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தூரில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மும்பை அணி சீரான இடைவேளையில் விக்கெட் களை பறிகொடுத்தது. அதிக பட்சமாக தொடக்க வீரரான பிரித்வி ஷா 71, சூர்ய குமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தனர்.
ஹெர்வாத்கர் 4, ஸ்ரேயாஷ் ஐயர் 14, கேப்டன் ஆதித்யா தாரே 4, சித்தேஷ் 23, அபிஷேக் நாயர் 35, சாந்து 6, தாக்குர் 0, தபோல்கர் 3 ரன்களில் வெளி யேற மும்பை அணி 83.5 ஓவர் களில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
குஜராத் அணி தரப்பில் ஆர்.பி.சிங், கஜா, ரஜூல் பாத் ஆகியோர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த குஜராத் அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்தது.
சமித் கோஹெல் 2, பன்சால் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 10 விக்கெட்களுடன் குஜராத் அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.