மகளிர் உலகக் கோப்பை தகுதி சுற்று தொடரின் சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பிரதான சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிரணி 33.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தீப்தி சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மோனா மேஷ்ராம் 78 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 73 ரன்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியின் பிரதான சுற்றில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது.