இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாகவும், வரும் மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியானது.
அதை முற்றிலும் மறுத்துள்ள கபில்தேவ், “நான் ஆம் ஆத்மியில் சேரவில்லை என்பதை ஊடகங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரப்பூரவமாக நான் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.