இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இருந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கெய்ரன் பொல்லார்ட் விலகியுள்ளார். உள்ளூரில் நலநிதி திரட்டுவதற்கான கால்பந்து போட்டி ஒன்றில் அவர் சமீபத்தில் பங்கேற்றார். அப்போது அவருக்கு கால் முட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக குணமடையாததால் அணியில் இடம் பெறவில்லை.
டி20 உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்தில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.