ரியோ ஒலிம்பிக் பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் போட்டியில் பிவி சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.
காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் சீன தைபேவின் தி ட்சூ யிங்கை 21-13 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
காலிறுதிப் போட்டியில் பிவி சிந்து, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற - உலக தரவரிசையில் 2-வது இடம்பிடித்து உள்ள சீன வீராங்கனை வாங் யிகானை சந்திக்கிறார்.
சிந்து ஏற்கெனவே இரண்டு முறை சர்வதேச போட்டிகளில் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார்.
நம்பிக்கை நட்சத்திரங்கள்:
ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை பதக்க கணக்கை துவக்காத இந்தியாவுக்கு சிந்து நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். சிந்து அரையிறுதிக்கு முன்னேறினால் வெண்கலப் பதக்கம் வாய்ப்பு உறுதியாகும்.
அதேபோல் பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் ஆடவர் ஒற்றையர் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.