விளையாட்டு

ஓய்வு குறித்து அப்ரீடி சிந்திக்க வேண்டும்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நெருக்கடி

பிடிஐ

இந்தியாவில் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்ட னாக அப்ரீடி செயல்பட்டார். இந்த தொடரிலும், ஆசிய கோப்பை யிலும் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் கேப்டன் பதவியில் இருந்து அப்ரீடி நீக்கப் பட்டார். அத்துடன் டி 20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்ரீடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளை யாட விரும்பினார். சமீபத் தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி 20 போட்டியில் அப்ரீடிக்கு இடம் கொடுக்கப்பட வில்லை. இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத் தில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரில் பாகிஸ் தான் அணி விளையாட உள்ளது.

அதன்பின் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கிறது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது அப்ரீடி அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுத்தியுள்ளது.

இதற்காகத்தான் மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அப்ரீடி இடம்பெறாத நிலையில் 16-வது வீரராக அவரை சேர்க்க வாரியம் விரும்புவதாகவும் பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டெய்லி ஜங்க் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த டி 20 உலகக் கோப்பைக் கான அணியை தயார்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பாகிஸ்தான் வாரியம் தீவிரமாக உள்ளது. அப்ரீடி நல்ல மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும் வாரியம் கருதுகிறது. அதே வேளையில் வெளிநாட்டு லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அப்ரீடி விளையாட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்ரீடி மேற்கிந்தியத் தீவுகள் தொடருடன் சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT