விளையாட்டு

மக்காவ் கிராண்ட் ப்ரீ பேட்மிட்டனில் சிந்து சாம்பியன்

செய்திப்பிரிவு

இந்தியாவின் இளம் விராங்கனை பி.வி.சிந்து, மக்காவ் ஓபன் கிராண்ட் ப்ரீ மகளிர் ஒற்றையர் பேட்மிட்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கடந்த மே மாதம் நடந்த மலேசிய ஓபனுக்குப் பிறகு, சிந்து வெல்லும் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

போட்டித் தரநிலையில் முதலிடம் வகித்த 18 வயது சிந்து, மக்காவ் கிராண்ட் ப்ரீ இறுதிச் சுற்றில் கனடாவின் மிஷேல் லியை எதிர்கொண்டார்.

37 நிமிடங்களே நீடித்த இப்போட்டியில், சிந்து 21-15 21-12 என்ற நேர் செட்களில் மிஷேலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

SCROLL FOR NEXT