விளையாட்டு

நியூஸி.க்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

செய்திப்பிரிவு

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின், மூன்றாவது நாளான இன்று இந்தியா வலுவான நிலையில் இருந்தது.

தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் நியூஸிலாந்து அணி, ஆட்ட நேர முடிவில், தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில், 99 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து, இந்தியாவைவிட 6 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது.

அந்த அணியின் மெக்கல்லம் ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் குவித்திருந்தார். மறுமுனையில் வால்டிங் 52 ரன்கள் சேர்த்திருந்தார்.

துவக்க ஆட்டக்காரர் ஃபுல்டன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ரூதர்ஃபோர்டு 35 ரன்கள் எடுத்தார். வில்லியம்ஸன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். லாடஹ்ம் 29 ரன்கள் சேர்த்தார். ஆண்டர்சன் 2 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இந்திய தரப்பில் ஜாகீர்கான் 3 விக்கெட்டுகளையும், முகமது சமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, இந்தியா தனது முதல் இன்னிங்ஸ்சில், 102.4 ஓவர்களில் 438 ரன்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக ரஹானே 118 ரன்களையும், தவாண் 98 ரன்களையும் எடுத்தனர். தோனியின் 68 ரன்கள், அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்த உதவியது.

நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸ்சில் 192 ரன்கள் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT