பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஏழ்மையிலும் சாதனை படைத்த மாரியப்பனுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
மாரியப்பன் பயின்று வரும் சேலம் ஏவிஎஸ் கல்லூரி நிர்வாகிகள், பயிற்சியாளர் சுரேஷ் மற்றும் சக மாணவர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அவரது வெற்றியைக் கொண்டாடினர். கல்லூரி மாணவ, மாணவியர்கள் கைகளில் தேசிய கொடியைப் பிடித்தபடி மைதானத்தை வலம் வந்து தங்கள் உற்சாகத்தை வெளிப் படுத்தினர். தங்கப் பத்தகம் வென்ற மாரியப்பனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் பயிற்சி அளித்த, தடகள பயிற்சியாளர் இளம்பரிதி கூறும்போது, ‘‘கடந்த 2014-ம் ஆண்டு முதல் என்னிடம் மாரியப்பன் பயிற்சி மேற்கொண்டார். காலை மூன்று மணி நேரமும், மாலை மூன்று மணி நேரமும் தினமும் அவர் பயற்சி மேற்கொள்வார். அவரது உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த பரிசாக இதை உணர் கிறோம். அவரது வெற்றி நம் தேசத்துக்கு கிடைத்த பெருமை, அவர் பிறந்த மண்ணுக்கு கிடைத்த புகழ்’’ என்றார்.
ஏவிஎஸ் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரும், மாரியப்பனுக்கு பயிற்சி அளித்தவருமான சுரேஷ் கூறியதாவது:
ஏழ்மை குடும்பத்தில் பிறந்த மாரியப்பன், கால் ஊனத்தை பொருட்படுத்தாமல், ஆர்வமுடன் அயராது உழைத்ததற்கு கிடைத்த வெற்றி இது. தேசிய அளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார். இதைத்தொடர்ந்து பெங்களூருவை சேர்ந்த பயிற்சி யாளர் சத்யநாராயணன், பாராலிம் பிக் வாலிபால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவர் சந்திரசேகர் ஆகியோர் சர்வதேச போட்டியில், அவரை பங்கேற்க அழைத்து சென்றனர். 1.91 மீட்டர் முதல் 1.92 மீட்டர் வரை அவர் உயரம் தாண்டி பயிற்சி பெற்று வந்தார். 2 மீட்டர் உயரம் தாண்டுவதை இலக்காக கொண்டே, பாராலிம்பிக் போட்டி யில் மாரியப்பன் பங்கேற்றார். புதிய சூழல், புதிய பருவநிலை, புதிய உணவு வகைகள் உள்ளிட்ட வையால்தான் அவரால் அந்த இலக்கை அடைய முடியவில்லை.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாரியப்பன், உயரம் தாண்டு தலின் மீது கொண்ட தணியாத ஆர்வத்தாலேயே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்க முடிந்தது ஏழ்மையில் எழுச்சியுற்ற மாரியப்பனுக்கு, எங்களின் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில் வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்கி றோம். இவ்வாறு அவர் கூறினார்.
மாரியப்பனின் சொந்த கிராம மான பெரியவடகம்பட்டியில் உள்ள மக்கள் இனிப்புகளை வழங்கி மாரியப்பனின் வெற்றியைக் கொண்டாடினர்.